இந்த தளத்தில் நான் எனது கருத்துக்களை - தமிழைப் பற்றி , தமிழ் நாட்டைப் பற்றி மற்றும் பாரதத்தைப் பற்றி - பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இயைந்த மற்றும் எதிர் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
இன்னொரு முக்கிய விளக்கம்... நான் அரசியல் நிகழ்வுகளை, ஒரு தொலை தூரப் பார்வையாளனகத்தான் இது வரை கண்டு வந்துள்ளேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்லன். படித்த பண்புள்ள எந்த ஒரு இந்தியனும் சேரத் தக்க , ஆதரவு தரத் தக்க அரசியல் கட்சி தற்பொழுது இந்தியாவில் ஏதும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. எனவே, எனது கருத்துக்கள் எதாவது ஒரு தரப்பினர்க்கு உடன்பாடில்லாமல் அமையலாம். ஏற்கனவே எழுதியபடி, இயைந்த மற்றும் எதிர் கருத்துக்கள், அனைத்தையும் வரவேற்கிறேன் .
தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் மிகப் பெரிய அபாயமே, தமிழினக் காவலர் எனக் கூறிக் கொள்ளும் கூட்டம் தான். இந்த கூட்டத்தை நான் அறிந்து தமிழினம் கூடி தேர்ந்தெடுத்ததாக தெரியவில்லை. தாமாக அறிவித்துக் கொண்டு, தமிழினத்துக்கு பெரும் கேடு விளைவித்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட நடிக நடிகையரின் தலைவலி, காய்ச்சல் போன்ற நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்க முனைந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியாததில், வியப்பு ஒன்றும் இல்லை. இந்தத் தளத்தில் நான் தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றியும் விமரிசிக்க உள்ளேன்.
WI spesial
10 years ago

No comments:
Post a Comment