Wednesday, February 27, 2008

ஆனந்த விகடன் - பிப் 27, 2008

லெட்டர்ஸ் - ஆ.வி.யின் இரட்டை வேடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தொப்பி, திலகம் இருவரது ரசிகர்களும் புலம்பித் தள்ளி விட்டனர். மகாத்மாவிற்கு அடுத்து, இல்லை ..இல்லை.. மகாத்மாவிற்கும் மேலாக குணாதிசயம் கொண்ட இந்த அற்புதப் பிறவிகளைப் பற்றி எப்படி எழுதலாம்? மிகச் சரி. ஜெயமோகன், இனி நீங்கள் தமிழினத் துரோகி என்று அறியப் படுவீர்கள். தமிழினக் காவலர்களின் கேள்விக் கணைகளுக்கு தயாராகுங்கள்.
தமிழக ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையானவை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ்ப் பண்பாடு என்று மேடையெல்லாம் முழங்கும் பெரும்பாலான நமது தமிழினக் காவலர்கள் அதை எவ்வளவு தூரம் பின்பற்றுகிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். மறற நாட்டவரும் மறற மாநிலத்தவரும் இது தமிழகத்தின் பாரம்பரியம் என்று நம்மை கேலி செய்வதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், நமது ஊடகங்கள் இது பற்றி எழுதியோ பேசியோ நாம் பார்த்ததில்லை. மாறாக, இது ஏதோ மிக இயல்பான நிகழ்வு போல், கண்டு கொள்வேதேயில்லை. சுட்டிக் காட்டியதுமில்லை, காட்டுவதுமில்லை. வாழ்க தமிழக ஊடக தர்மம் .
எங்கோ தொடங்கினேன் எங்கோ சென்று விட்டேன். பொருத்தருளவும். இது போன்று மீண்டும் மீண்டும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால் பழகிக் கொள்வதும் பொறுத்துக் கொள்வதும் உத்தமம்.

ஆ.வி. இடம் எழுப்பக்கூடாத வினா - ஞானி ஏன் குமுதத்துக்குச் சென்று விட்டார்?

No comments: